மலையகத்தின் பல பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள பொலிஸார்
அரசாங்கம் விதித்துள்ள பயணக்கட்டுப்பாடுகளை அமுல்படுத்தும் நோக்கில் இன்று முதல் மலையகத்தின் பல பகுதிகளில் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மலையக தோட்டங்களின் அனைத்து நகரங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளையும், தோட்டப் பகுதிகளில் உள்ள பல பகுதிகளையும் உள்ளடக்கும் வகையில் பொலிஸ் தடை அமைக்கப்பட்டுள்ளன.
இந்த சந்தர்ப்பத்தில் பெருந்தோட்ட நகரங்களும், புறநகர்ப் பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டுள்ளன. மலையக தோட்டங்களில் வசிக்கும் மக்களை தேவையற்ற முறையில் நகரங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும், வீதிகளிலும் பயணிப்பதைத் தவிர்க்குமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறுபவர்களைக் கைது செய்து சட்ட நடவடிக்கைளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தலவாக்கலை நகரில் பல இடங்களிலும் இன்று தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான நடவடிக்கை தலவாக்கலை - லிந்துலை நகரசபையின் தலைவரின் வழிகாட்டலின் கீழ் நகர சபை சுகாதார ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.












