திருகோணமலையில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
பலத்த பாதுகாப்பு
திருகோணமலை நகரை அண்மித்த பகுதியில் முப்படையினர் பாதுகாப்பு கடமையில் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் அபயபுர சந்தி, மூன்றாம் கட்டை, தபால் கந்தோர் சந்தி மற்றும் அதிகளவில் மக்கள் நடமாடும் இடங்களில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
கொழும்பில் எதிர்ப்பு
கொழும்பில் நாளை நடைபெற இருக்கின்ற எதிர்ப்பு பேரணியை தொடர்ந்து ஜனாதிபதி மாளிகை முற்றுகையிடப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் அவசரமாக பாதுகாப்பு திருகோணமலையில் பலப்படுத்துவதன் நோக்கம் கடந்த எதிர்ப்பின் போது மகிந்த ராஜபக்ச திருகோணமலைக்கு பாதுகாப்பு கருதி வருகை தந்திருந்தார்.
இதேபோன்று நாளை நடைபெற உள்ள எதிர்ப்பின் போது ராஜபக்ச குடும்பத்தை பாதுகாக்கும் நோக்கில் திருகோணமலைக்கு அழைத்து வரலாம் எனவும், இதனாலையே பாதுகாப்பு பலப்படுத்தப்படுவதாகவும் மக்கள் மத்தியில் கருத்துகள் நிலவுகின்றன.
இருந்த போதிலும் திருகோணமலை மாவட்டத்தில் பல பிரதேசங்களில் நாளைய தினம்
எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




