நாட்டில் அதிக மழைவீழ்ச்சி: மின்சார உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்பு
நாடளாவிய ரீதியில் பெய்து வரும் கடும் மழையினால் நாட்டிற்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நீரின் அளவை அதிகரிக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டின் வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு, ஊவா, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போது 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகின்றமையால் நீர் மின் உற்பத்திக்கு அது உதவும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
நாட்டிலுள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்து சில காலமாக நீர்மின் உற்பத்தி தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவில் திருமணம்... குடும்பம் ஒன்று விமான நிலையம் செல்லும் வழியில் கோர சம்பவம் News Lankasri
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri