முக்கிய சிறைக்கைதிகளிற்கு அதி பாதுகாப்பு சிறைக்கூடங்கள்
நாட்டில் உள்ள பல்வேறு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் மற்றும் பாதாள குழுக்களின் 30 உறுப்பினர்கள் பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
பூஸா சிறைச்சாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள 30 சிறைக்கூடங்களில் அவர்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 30 கைதிகளே அதி பாதுகாப்பு சிறைக்கூடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
24 மணித்தியால CCTV கண்காணிப்பு மற்றும் விசேட அதிரடிப்படையினரின் நடமாடும் கண்காணிப்பு நடவடிக்கையின் கீழ் பூஸா அதி பாதுகாப்பு சிறைச்சாலை பராமரிக்கப்படுவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.