போலி வேலை வாய்ப்பு மோசடிகள் குறித்து எச்சரிக்கை
இலங்கையில் போலி வேலை வாய்ப்பு மோசடிகள் குறித்து எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை கணினி அவசர பதிலளிப்பு குழு (SLCERT) பொதுமக்களுக்கு இந்த எச்சரிக்கயை விடுத்துள்ளது.
குறைந்தளவு வேலைக்கு உயர் சம்பளம் அளிக்கும் போலியான வேலைவாய்ப்பு மோசடிகளுக்கு எதிராக இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதிகாரிகள் கூறியது போல, மோசடிக் கருவிகள் பிரகாசமான விளம்பரங்கள் மற்றும் ஆன்லைன் பிரச்சாரங்களின் மூலம் நிழல் இலகுவில் ஏமாறக்கூடிய நபர்களை குறிவைக்கின்றனர் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு சந்தர்ப்பங்களில் வேலை வாய்ப்பின் பெயரில் பதிவு கட்டணங்கள் அல்லது வேறும் கட்டணங்கள் பெற்றுக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடியில் சிக்கினால், பணம் இழப்பது, தனிப்பட்ட தகவல்கள் வெளியிடப்படுவது, சில நேரங்களில் மனித கடத்தலுக்கு ஆளாகிவிடுவது போன்ற அபாயங்கள் உள்ளன.
வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்புக்களிள் அதன் அதிகாரபூர்வதன்மையை கவனிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நிறுவனங்களின் இணையதளங்கள் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) வழியாக உறுதிப்படுத்துமாறு பரிந்துரைத்துள்ளது.
வேலை வாய்ப்பு பெற்றுக்கொள்ள கட்டணங்களை செலுத்த வேண்டிய அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான வேலை வாய்ப்பு மோசடிகள் தொடர்பில் இலங்கை கணினி அவசர பதிலளிப்பு குழு அடிக்கடி எச்சரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        