ஏற்றுமதி வர்த்தகத்தில் இலங்கைக்கு கிடைத்துள்ள மில்லியன் வருமானம்
கடந்த 5 வருடங்களை விட இந்த வருடம் ஏற்றுமதி வர்த்தகத்தினூடாக 86,000 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக இலவங்கப்பட்டை, மிளகு மற்றும் கிராம்பு ஆகியவற்றின் ஏற்றுமதி மூலம் இந்தத் தொகை ஈட்டப்பட்டதாக அதன் அபிவிருத்திப் பணிப்பாளர் உபுல் ரணவீர குறிப்பிடுகின்றார்.
மேலும் அவர் தெரிவிக்ககையில்,
அந்நியச் செலாவணி
‘‘கடந்த 5 வருடங்களைக் கருத்தில் கொண்டு, 2023ஆம் ஆண்டுடன் தொடர்புடைய பயிர்களின் ஏற்றுமதி மூலம் அதிக அந்நியச் செலாவணியை ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் ஈட்டியுள்ளது.
அதன்படி, இந்த ஆண்டு தொடக்கம் முதல் ஜூன் 2023 வரை 34,771 மெட்ரிக் தொன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு, 86,680 மில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டமுடிந்தது.
மேலும், இலவங்கப்பட்டை, கிராம்பு மற்றும் மிளகு போன்ற பயிர்கள் பிரதான பங்களிப்பை வழங்கியுள்ளதுடன், பேரீச்சம்பழம் ஏற்றுமதியின் மூலம் பெருமளவிலான அந்நியச் செலாவணியும் கிடைத்துள்ளது.'' என உபுல் ரணவீர தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் ரஜினியின் கூலி.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri

கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
