மீண்டும் ட்ரம்பின் உத்தரவை அதிரடியாக நிராகரித்த நீதிமன்றம்..!
அமெரிக்க மண்ணில் பிறக்கும் அனைவருக்கும் தானாகவே அந்நாட்டின் குடியுரிமை வழங்கும் "பிறப்புரிமை குடியுரிமை" சட்டத்தை இரத்து செய்யக் கோரி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவை அமெரிக்க உயர் நீதிமன்றம் அதிரடியாக நிராகரித்துள்ளது.
கடந்த 2025 ஜனவரி 20 அன்று ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றவுடன், முறையான ஆவணங்கள் இல்லாத அல்லது தற்காலிக விசாக்களில் அமெரிக்காவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினரின் குழந்தைகளுக்குப் பிறப்புரிமை அடிப்படையில் வழங்கப்படும் தானியங்கி குடியுரிமையைத் தடுக்க ட்ரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.
ட்ரம்பின் முயற்சி
அமெரிக்கக் குடியேற்றச் சட்டங்களில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவர முயன்ற ஜனாதிபதி ட்ரம்பின் இந்த முயற்சிக்கு, உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.
ஜனாதிபதி ட்ரம்பின் இந்த அதிரடி உத்தரவு, அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்திற்கும், இது தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றங்கள் வழங்கிய முந்தைய தீர்ப்புகளுக்கும் முற்றிலும் முரணானது என்று கீழ் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

அந்தத் தீர்ப்பை தற்போது ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமெரிக்க உயர் நீதிமன்ற அமர்வும் ஏகமனதாக உறுதி செய்துள்ளது.
அமெரிக்க அரசியலமைப்பின் 14ஆவது திருத்தத்தின்படி, அமெரிக்க மண்ணில் பிறக்கும் எவருக்கும் குடியுரிமை மறுக்கப்படக் கூடாது என்ற அடிப்படை உரிமையை இந்தத் தீர்ப்பு நிலைநிறுத்தியுள்ளது.
குடியேற்றக் கொள்கைகளை ஒடுக்க நினைத்த ஜனாதிபதி ட்ரம்பின் நிர்வாகத்திற்கு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு பெரும் முற்றுப்புள்ளியாக அமைந்துள்ளது.
அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்ற போது மந்திரக்கோல் வழங்கப்படவில்லை! அமைச்சர் வசந்த சமரசிங்க
You may like this..
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 10 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam