இஸ்ரேல் தாக்குதல் : ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் முக்கிய தலைவரது தொடர்பு துண்டிப்பு
இஸ்ரேலின் வான்வழித்தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லாஹ் தலைவர் சயீத் ஹசன் நஸ்ரல்லாவின் வாரிசாக கருதப்பட்ட ஹசேம் சஃபிதீனின் ( Hashem Safieddine) தொடர்பும், கடந்த வெள்ளிக்கிழமை முதல் துண்டிக்கப்பட்டுள்ளதாக லெபனான் பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
அவரையும் இஸ்ரேல், வான்வழித் தாக்குதலில் குறி வைத்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
ஈரான் ஆதரவு பெற்ற லெபனான் குழுவான ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிரான தமது தாக்குல் தொடரில், இஸ்ரேல் கடந்த வியாழன்று, பெய்ரூட்டின் தெற்கு பகுதிகளில் ஒரு பாரிய தாக்குதலை நடத்தியது.
வான்வழி தாக்குதல்
இதன்போது ஒரு நிலத்தடி பதுங்கு குழியில் ஹசேம் சஃபிதீனை குறி வைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது
எனினும் சஃபிதீன் குறித்து இதுவரை ஹிஸ்புல்லாஹ் போராளி அமைப்பு எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இந்தநிலையில் சஃபிதீனும் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தால், அது ஹிஸ்புல்லாஹ்வுக்கு பாரிய பின்னடைவாகவே இருக்கும் என்று களத்தகவல்கள் கூறுகின்றன.
முன்னதாக செப்டம்பர் 27 அன்று நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லாஹ்வின் தலைவர் நஸ்ரல்லா உட்பட ஹிஸ்புல்லாஹ்வின் முக்கிய உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டனர்.
இந்தநிலையில், இஸ்ரேலிய தாக்குதல்களால் நூற்றுக்கணக்கான சாதாரண லெபனானியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 1.2 மில்லியன் மக்களில் கால்வாசி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |