ஹசன் நஸ்ரல்லாவின் மரணத்தை உறுதிபடுத்தியுள்ள ஹிஸ்புல்லாஹ்
புதிய இணைப்பு
லெபனான் - பெய்ரூட்டில் நடந்த வான்வழித் தாக்குதலில் ஹெஸ்பொல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ்வை இஸ்ரேலிய இராணுவத்தினால் கொல்லப்பட்டமையை ஹிஸ்புல்லாஹ் உறுதிப்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் அதற்கு அப்பால் உள்ள இஸ்ரேல் எதிர்ப்பு சக்திகளில் ஒரு தலைசிறந்த நபரான நஸ்ரல்லாஹ் கொல்லப்பட்டது ஹெஸ்பொல்லாவுக்கு மிகப்பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
பெய்ரூட்டில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல்லாஹ் போராளிக் குழுவின் தலைவரான ஹசன் நஸ்ரல்லா( Hassan Nasrallah) கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் இன்று தெரிவித்துள்ளது.
பெய்ரூட்டின் தெற்கில் உள்ள தெஹியேவில் உள்ள ஹிஸ்புல்லா தலைமையகத்தில் சந்திப்பு ஒன்றை நடத்திக் கொண்டிருந்த போதே,இஸ்ரேலிய விமானப்படை துல்லியமான வான்வழித் தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெபனானுடன் பதற்றம்
எனினும் ஹிஸ்புல்லாஹ் தரப்பு இன்னும் இதனை உறுதிப்படுத்தவில்லை நஸ்ரல்லாஹ் ஹிஸ்புல்லாஹ் அமைப்பை மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வழிநடத்தியுள்ளார்.

இந்தநிலையில் ஹிஸ்புல்லாஹ் அமைப்பு இன்று இஸ்ரேலை நோக்கி எறிகணைகளை ஏவியதை அடுத்து, இஸ்ரேலும் பதிலுக்கு கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
இதற்கிடையில் லெபனானுடன் பதற்றம் அதிகரித்து வருவதால், கூடுதல் உதவி வீரர்களை அணி திரட்டுவதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.
இதேவேளை இஸ்ரேலிய தாக்குதல்களால், லெபனானில் கடந்த ஒரு வாரத்தில் குறைந்தது 720 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
கார்த்திகை தீபம் சீரியல் புகழ் கார்த்திக் ராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம்... வெளிவந்த போட்டோஸ் Cineulagam