இஸ்ரேலின் வான் பாதுகாப்பினை ஊடறுக்க ஹிஸ்புல்லாவின் புதிய வியூகம்
இஸ்ரேலிய ராணுவத்திற்கு எதிரான போரில் ஹிஸ்புல்லா அமைப்பு 'ஃபைபர் ஆப்டிக்' (Fibre-optic) மூலம் இயக்கப்படும் புதிய வகை ட்ரோன்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
லெபனான் எல்லைப் பகுதியில் நிலவும் மோதலில், இஸ்ரேலின் நவீன மின்னணு பாதுகாப்பு வளையங்களை முறியடிக்க இந்தத் தொழில்நுட்பம் ஒரு முக்கிய ஆயுதமாக மாறியுள்ளது.
சாதாரண ட்ரோன்கள் ரேடியோ அலைவரிசைகள் மூலம் இயக்கப்படுவதால், அவற்றை 'ஜேமர்கள்' (Jammers) கொண்டு முடக்கிவிட முடியும்.

ஆனால், ஹிஸ்புல்லாவின் இந்த புதிய ட்ரோன்கள் மிக மெல்லிய ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் மூலம் இயக்குபவருடன் இணைக்கப்பட்டுள்ளன.
இதனால் இஸ்ரேலின் மின்னணுத் தடுப்பு அமைப்புகளால் (Electronic Defences) இவற்றின் சிக்னல்களைத் துண்டிக்கவோ அல்லது திசைதிருப்பவோ முடியாது. உக்ரைன் போரில் பயன்படுத்தப்பட்டு வரும் அதே உத்தியை தற்போது ஹிஸ்புல்லா கையிலெடுத்துள்ளது.
இந்த ட்ரோன்கள் மிகக் குறைந்த உயரத்தில் பறந்து வந்து இலக்குகளைத் தாக்குவதால், ரேடார்களில் இவை சிக்காமல் தப்புகின்றன. "இந்த வகை ட்ரோன்களை இயக்குவதில் நிபுணத்துவம் இருந்தால், அது எதிரிக்கு மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும்," என்று ராயல் யுனைடெட் சர்வீசஸ் நிறுவனத்தின் நிபுணர் ராபர்ட் டோலாஸ்ட் தெரிவித்துள்ளார்.
தெற்கு லெபனான் மற்றும் எல்லைப் பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இஸ்ரேலியப் படைகளைக் குறிவைத்து ஹிஸ்புல்லா இந்தத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இஸ்ரேலின் ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள் பெரிய அளவிலான ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் இடைமறித்து அழித்து வரும் நிலையில், இத்தகைய சிறிய மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ட்ரோன்கள் இஸ்ரேலியப் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன.
3 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி: மே மாதத்தில் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த ராசிகளுக்கு தான்! Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் - அழகே அழகு சீரியல்கள் மகா சங்கமம்.. ஒளிபரப்பு நேரம், தேதி எப்போது தெரியுமா? Cineulagam