சேவல் சண்டைக்கு தடை! தமிழக அரசாங்கத்துக்கு உத்தரவு!
தமிழகத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி வரை தமிழகத்தில் சேவல் சண்டைக்கு அனுமதி வழங்கக்கூடாது என தமிழக அரசாங்கத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரை மேல்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழகம், கரூர் மாவட்டம் பூலாம்வலசு கிராமத்தில் தைப்பொங்கல் பண்டிகையையொட்டி நடக்கவுள்ள சேவல் சண்டைக்கு தடை கோரி மதுரை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கொரோனா தொற்று பரவி வரும் இந்த சூழலில் சேவல் சண்டை நடத்துவது தொடர்பாக தமிழக அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து எதிர்வரும் 25 ஆம் திகதி மன்றில் அறிவிக்கவேண்டும் என்று உத்தரவிட்டனர்
அதுவரை தமிழகம் முழுவதும் சேவல் சண்டைக்கு அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசாங்கத்துக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri
யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri