இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல உதவியவர் கைது
இஷாரா செவ்வந்தி இலங்கையிலிருந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல படகு வழங்கி உதவியதாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் மன்னார்- இலுப்பைக்கடவை பொலிஸ் விசேட பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சந்தேக நபராகக் குறிப்பிடப்படும் இஷாரா செவ்வந்தி, மன்னார் ஊடாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்தமை விசாரணைகளில் தெரியவந்திருந்தது.
கைது
இந்நிலையில் அவர் இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல உதவியதாக சந்தேகிக்கப்படும் யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியைச் சேர்ந்த ஜேசுதாசன் செல்வசேத் எனப்படும் 'பலசி' என்பவர் இன்று(31.8.2026) மன்னார், இலுப்பைக்கடவை அருகே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஷாரா செவ்வந்தி, இலங்கையில் இருந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல குறித்த நபர் படகு வழங்கி உதவியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோட்டாபய ராஜபக்ச நுவரவெவ குளத்தை நிரப்பி கட்டிய சொகுசு ஹோட்டல்! ஓய்வுநிலை விரிவுரையாளர் வெளிப்படுத்திய தகவல்கள்