மின்சார நெருக்கடியை சமாளிக்க தனியாரிடம் உதவி!
நாட்டில் நிலவும் மின்சார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான பரிந்துரைகளை வழங்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார். ஜனவரி 25ம் திகதி முதல் பெப்ரவரி 04ம் திகதி வரை தினசரி மின்வெட்டுக்கான அனுமதியை இலங்கை பொதுச் சபையிடம் கோரியுள்ளது.
இதன்படி, எதிர்காலத்தில் நீண்டகால மின்வெட்டு தேவைப்படாது என அவர் நம்பிக்கையுடன் குறிப்பிட்டார். தற்போது, அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் பல 3,000 மெகாவாட் ஜெனரேட்டர்களை வைத்துள்ளன.
இந்த ஜெனரேட்டர்கள் நாட்டில் மின்சார உற்பத்திக்கு உதவும் எனவும், மின்சாரத்தை உற்பத்தியை செய்ய முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார். அத்தகைய ஜெனரேட்டர்களை வைத்திருக்கும் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.
இந்நிலையில், மின்சார நெருக்கடியை சரிசெய்ய தனியார் நிறுவனங்கள் தங்கள் உதவியை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
