இலங்கைக்கு ஹெலிகொப்டர் வழங்க இத்தாலி இணக்கம்
மனித கடத்தலுக்கு எதிரான இலங்கையின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக இத்தாலி தெரிவித்துள்ளது.
இந்நடவடிக்கைகளுக்காக ஹெலிகொப்டர்களை வழங்க இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் ரீட்டா ஜி. மனேலா இணக்கம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்த இத்தாலிய தூதுவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு உதவ இத்தாலி விசேட கவனம்
இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
கலாசார பரிமாற்றங்கள், சுற்றுலா மேம்பாடு, சாத்தியமான முதலீடுகள், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் இந்த சவாலான காலங்களில் இலங்கைக்கு இத்தாலி எவ்வாறு உதவ முடியும் என்பது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அண்ணன்கள் வீட்டில் ஏற்பட்ட அவமானம், அழுத கோமதிக்கு வந்த சந்தோஷ செய்தி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கொண்டாட்ட எபிசோட் Cineulagam
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan