இலங்கையை இன்று உலுக்கிய உலங்கு வானூர்த்தி விபத்துக்கான காரணம் - உயிரிழந்தவர்கள் யார்...!
இலங்கை விமான படைக்கு சொந்தமான உலங்கு வானூர்த்தி மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானமை தொடர்பில் 9 பேர் அடங்கிய குழு விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த உலங்குவானூர்தியில் 12 பேர் பயணித்த நிலையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். உலங்கு வானூர்தியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவசர தரையிறக்கம் செய்ய முற்பட்ட போது விபத்து ஏற்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
விமானப்படை மற்றும் இராணுவ வீரர்கள் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
வைத்தியசாலை தகவல்கள்
விபத்தில் சிக்கிய 12 பேரும் மீட்கப்பட்டு அரலகங்வில பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் 8 பேர் பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். எனினும், 6 வீரர்கள் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராணுவ விசேட படையைச் சேர்ந்த நான்கு பேர் மற்றும் விமானப்படையைச் சேர்ந்த இரண்டு பேருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
நண்பர்கள் கவலை
இந்நிலையில் உயிரிழந்தவர்களில் இராணுவ வீரர் பசிந்து பெர்னாண்டோவும் ஒருவராகும். கடந்த சில மணிநேரங்களாக சமூக ஊடகங்களில் பல்வேறு நபர்கள் அவர் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
தனது தொழிலின் மீதான அன்பும் மரியாதையும் பசிந்துவை இந்த அளவுக்குக் கொண்டு வந்திருந்தாலும், இன்று அவர் அமைதியாகிவிட்டார்.
பாடசாலை நாட்களிலும் அதற்குப் பிறகும் வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்ட அவர் தனது தொழில் வாழ்க்கையிலும் வெற்றியைப் பெற்றார். எனினும் நீடிக்கவில்லை.
பசிந்துவின் கருணை, வலிமை மற்றும் விளையாட்டுத் திறன் ஒருபோதும் மறக்க முடியாதது. அவர் பலரின் இதயங்களில் ஒரு ஹீரோவாக வாழ்கின்றார்” என நண்பர்கள் குறிப்பிட்டுள்ளார்.