ஹெலிகொப்டர் விபத்து! இந்திய முப்படை தலைமை தளபதி உள்ளிட்ட 13 பேர் பலி
புதிய இணைப்பு....
தமிழகம் குன்னுார் ஹெலிகொப்டர் விபத்தின் போது இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹெலிகொப்டர் விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு! - பிபின்ராவத்தின் நிலை என்ன?
தமிழகம் குன்னுார் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நீலகிரி மாவட்டம், குன்னுார், வெலிங்டனில் உள்ள இராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லுாரியில் இன்று இடம்பெறவிருந்த இராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் பயணித்தனர்.
சூலுாரிலுள்ள இராணுவ விமானப்படைத் தளத்திலிருந்து, 11.47 மணியளவில் ஹெலிகொப்டரில் வெலிங்டன் நோக்கி பயணித்தது. இராணுவ மையத்தை அடைய 10 நிமிடங்கள் இருந்த நிலையில் ஹெலிகொப்டர் குன்னுார் மலைப்பாதையிலுள்ள காட்டேரி பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ன. மேலும் ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதற்காக டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த உத்தியோகப்பூர்வமான அறிவிப்பு நாளை இந்திய நாடாளுமன்றில் வெளியிடப்படும் என பாதுகாப்பு அமைந்நர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல்கள் தற்போது பெறப்பட்டு வருவதாகவும், தகவல்கள் உறுதிசெய்யப்பட்ட பின்னரே உத்தியோகப்பூர்வமான அறிவிப்பை வெளியிடமுடியும் என அவர் கூறியுள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தில் யாரும் மத்தியஸ்தம் செய்ய தேவை இல்லை - டிரம்ப் கோரிக்கையை நிராகரித்த மோடி News Lankasri

ட்ரம்பால் அறிவிக்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போர்நிறுத்தம்: பிரதமரிடம் விளக்கம் கேட்கும் எதிர்க்கட்சிகள் News Lankasri
