ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கடும் வாக்கு வாதம்
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் தலைமையில் இன்று நடைபெற்ற ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் சூடான கடும் வாக்கு வாதங்கள் முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் விமல் வீரவங்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை விமர்சித்து வெளியிட்டுள்ள கருத்துக்கு ராஜாங்க அமைச்சர் நிமல் லங்சா கடும் எதிர்ப்பை முன்வைத்து பேசியுள்ளார்.
இதன் பின்னர் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, சில தெளிவுப்படுத்தலை முன்வைக்க முயற்சித்த போது, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதற்கு எதிராக கருத்து வெளியிட்டதை அடுத்து கூட்டத்தில் வாக்குவாதம் மேலும் முற்றியுள்ளது.
கூட்டத்தில் ஏற்பட்ட நிலைமையை தணிக்க பிரதமர் மகிந்த ராஜபக்ச தலையிட்டுள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் தான் இன்று நீதிமன்றத்திற்கு செல்ல உள்ளதாக கூறி, அமைச்சர் விமல் வீரவன்ச இந்த கூட்டத்தில் கலந்துக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.



