நுவரெலியாவில் கனரக வாகனம் விபத்து: ஒருவர் படுகாயம்(Photos)
நுவரெலியாவிலிருந்து பதுளை நோக்கி அரிசி ஏற்றிச் சென்ற கனரக வாகனமொன்று நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று(5) இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இயந்திரக் கோளாறு

இதேவேளை சம்பவத்தில் கனரக வாகன சாரதி படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இயந்திரக் கோளாறு காரணமாகவே வாகனம் கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது எனவும் வீடொன்றுக்கு அருகில் விபத்துக்குள்ளானதால் வீட்டுக்கு பலத்த சேதமேற்பட்டுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை

பொலன்னறுவையிலிருந்து வெலிமடை, பதுளை மற்றும் நுவரெலியா போன்ற பகுதிகளில் உள்ள மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு பொருட்கள் விநியோகிக்கும் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
விமானத்துக்குள் நுழைந்த ஒரு கொசு... நான்கு பேருக்கு மலேரியா தொற்று உருவானதால் பரபரப்பு News Lankasri
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri