இந்தியா வரும் புடின்! டெல்லி விமான நிலையம் உட்பட பல இடங்களில் பலத்த பாதுகாப்பு
ரஷ்ய ஜனாதிபதி புடின் இன்று (04) இந்தியாவிற்கு வருகை தருவதை முன்னிட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ரஷ்ய ஜனாதிபதி இரு நாட்கள் பயணமாக இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி டெல்லியில் இடம்பெறவுள்ள 23 ஆவது இந்திய- ரஷ்ய உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியுடன் பங்கேற்க உள்ளார்.
விமான நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் பலத்த பாதுகாப்பு
ஒபரேஷன் சிந்துார் நடவடிக்கையின் போது ரஷ்யாவின் எஸ் – 400 வான் பாதுகாப்பு கவசம் முக்கிய பங்காற்றியுள்ளது.

இந்தச் சூழலில், இன்று (4) ரஷ்ய ஜனாதிபதியின் இந்தியா வருகையை முன்னிட்டு இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என இந்திய மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புடின் வருகையை முன்னிட்டு டெல்லி விமான நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.