இலங்கைக்கு விஜயம் செய்யும் பாகிஸ்தான் பிரதமருக்கு பலத்த பாதுகாப்பு
இலங்கைக்கு விஜயம் செய்யும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. எதிர்வரும் 22ஆம் திகதி திங்கட்கிழமை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் பாகிஸ்தான் பிரதமருக்கு விசேட இராணுவ மரியாதை அணிவகுப்பு நடத்தப்பட உள்ளது.
இந்த இராணுவ மரியாதை அணுவகுப்பு குறித்த ஒத்திகைகள் இன்றைய தினம் நடைபெற்றன. இந்த ஒத்திகைகளை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேரில் பார்வையிட்டுள்ளார்.
பிரதமர் இம்ரான் கான், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இம்ரான் கானின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தற்பொழுது இலங்கைக்கு விஜயம் செய்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளனர்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 11 மணி நேரம் முன்
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam