வவுனியா மாவட்டத்தில் கடும் மழை! இயல்பு வாழ்க்கை பாதிப்பு
வவுனியா மாவட்டத்தில் இன்றைய தினம் பெய்த கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், வீடுகளிற்குள் வெள்ள நீர் தேங்கியுள்ளமையால் 14குடும்பங்களைச் சேர்ந்த 50பேர் பொது மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக வவுனியா நகர்ப்பகுதியில் இன்று காலை 8.30 மணியிலிருந்து 11.30மணி வரையான மூன்று மணி நேர காலப்பகுதியில் 54 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வானிலை அவதானம் நிலையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் வவுனியா நகர்ப்பகுதிகளில் வீதிகள் எங்கும் வெள்ளநீர் தேங்கியுள்ளதுடன் பூந்தோட்டம் மற்றும் சிறுநகர், கருப்பணிச்சாங்குளம் பகுதிகளில் வெள்ளநீர் வீடுகளிற்குள் உட்புகுந்துள்ளது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பைச் சந்தித்துள்ளது. வயல் நிலங்களிலும் வெள்ளநீர் தேங்கியுள்ளமையால் நெற்பயிர் செய்கையும் அழிவைச் சந்தித்துள்ளது.
இதேவேளை இன்றுகாலை 8.30 மணி வரையான கடந்த 24 மணிநேரத்தில் அதிக பட்சமாக ஓமந்தையில் 85 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், வவுனியாவில் 31.5 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், செட்டி குளத்தில் 28.0 மில்லிமீற்றர், நெடுங்கேணி 37 மில்லிமீற்றர், உலுக்குளத்தில் 50.6 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.



19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam