முல்லைத்தீவில் கடும் மழை - வீடுகள், கடைகளுக்குள் வெள்ளம் (Photo)
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு தினங்களாக தொடர்ந்தும் மழைபெய்து வருகின்ற நிலையில் மக்களின் வீடுகள் மற்றும் கடைகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது.
மக்களின் இயல்பு வாழ்க்கைப்பாதிப்பு
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பெய்துவரும் மழையினால் மருதமடு குளம் நிரம்பி வான்பாய்கின்றது. இதனால் மயில்குங்சன் குடியிருப்பு, பண்டியன் வெளி போன்ற பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மக்களின் பல வயல் வெளிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.
புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் வடிகாலமைப்புக்கள் சரியாக இல்லாத காரணத்தினால் நகரப்பகுதியில் உள்ள மக்களின் பல வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதுடன் வணிக நிலையங்கள் சிலவற்றுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ளன.
தொடர்ந்தும் மழை நீடிக்குமானால் வேறு இடங்களுக்கு இடம்பெயரவேண்டிய நிலை ஏற்படும் என மக்கள் தெரிவித்துள்ளார்.








