நுவரெலியாவில் பலத்த மழை: போக்குவரத்து துண்டிப்பு
நுவரெலியா மாவட்டத்தில் இன்று(20.4.2026) பல பிரதேசங்களில் பலத்த மழை பெய்துள்ளது.
சில பிரதேசங்களில் மழையுடன் கடும் காற்று வீசியதனால் மரங்கள் முறிந்து வீழ்ந்து பொது போக்குரவத்து துண்டிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்தனர்.
நோர்வூட் பகுதியில் மழையுடன் வீசி கடும் காற்றினால் தியசிறிகம, அயரபி, ஹொன்சி உள்ளிட்ட பகுதிகளில் பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்து போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளன.
ஜனாதிபதி அநுரவுக்கும் அமைச்சர் பிமலுக்கும் இடையில் முரண்பாடா - எதிர்கட்சியினரின் புதிய சதித்திட்டம்!
கடும் மழை
ஒரு சில இடங்களில் வீடுகளின் கூரைகள் மீதும் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.இதனால் எவருக்கும் காயங்கள் ஏற்டாத போதிலும் வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளன.

இதேவேளை ஹட்டனிலும் அதனை அண்டிய பகுதியிலும் மாலையில் கடும் மழை பெய்து வருவதுடன் ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் பல இடங்களில் பனி மூட்டமும் காணப்படுகின்றன.
எச்சரிக்கை
இதனால் வளைவுகள் நிறைந்த இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக தங்களின் வாகனங்களை முகப்பு விளக்குகளை ஒளிரச்செய்தவாறு அவதானமாக செலுத்துவதன் மூலம் விபத்துக்களை தவிர்த்து கொள்ளலாம் என போக்குவரத்து பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

மழையுடன் கடும் இடி மின்னல் தாங்கள் காணப்படுவதனால் இலத்திரனியல் மற்றும் மின் உபகரங்கள் பயன்படுத்துவதில் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 11 மணி நேரம் முன்
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
சொந்த ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan