சவுதியில் பெய்யும் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய முக்கிய நகரங்கள்
சவுதி அரேபியாவில் கடும் மழை காரணமாக பல முக்கிய நகரங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன.
மெக்கா, மதீனா மற்றும் ஜெட்டா நகர்களில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்படும் மக்கள்
அதேவேளை, அல்-ஷாஃபியாவில் 49.2 மில்லிமீற்றர் மழையும் ஜெட்டாவின் அல்-பசதீன் பகுதியில் 38 மில்லிமீற்றர் மழையும் மதீனாவின் நபிகள் நாயகம் பள்ளிவாசல் பகுதியில் 36.1 மில்லிமீற்றர் மழையும் அதன் அருகில் உள்ள குபா மசூதியில் 28.4 மில்லிமீற்றர் மழையும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், ஏற்பட்ட வெள்ளபெருக்கினால் பல வாகனங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன.
அத்துடன், பல பகுதிகள் அதிகமாக வெள்ளத்தில் முழ்கியுள்ள நிலையில் மக்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருவதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
Flood in mecca Saudi Arabia pic.twitter.com/yWrvSQmH7I
— World Socioeconomics (@geoserdar1) January 7, 2025
மேலும், வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகளையும் மற்றவர்களையும் மீட்பதற்கு மீட்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
