நுவரெலியாவில் கடும் மழை! பல இடங்களில் பனிமூட்டம்: வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை (Video)
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நிலவிய வரட்சியான காலநிலையினை தொடர்ந்து தற்போது பல பிரதேசங்களில் கன மழை பெய்து வருகிறது.
இந்த மழை காரணமாக நீரின்றி வரண்டு கிடந்த ஓடைகள் ஆறுகள் மற்றும் நீர் வீழ்ச்சிகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன.
மழையுடனான காலநிலையுடன் ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் கலுகல பிட்டவல கினிகத்தேனை,கடவல,வட்டவளை உள்ளிட்ட பகுதியிலும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதிகளில் குடாகம,ஹட்டன், கொட்டகலை,தலவாக்கலை,சென்கிளயார்,லிந்துலை,சமர்செட்,ரதல்ல் நானுஓயா உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவுவதனால் இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் எச்சரிக்கையாக நடந்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன சாரதிகள் அவதானம்
மேலும் மலையகத்தில் காணப்படும் பிரதான வீதியினை இணைக்கும் ஏனைய வீதிகளிலும் கடும் பனிமூட்டம் காணப்படுவதனால் இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகளும் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மழை காரணமாக வீதி வழுக்கும் நிலையில் இருப்பதனாலும்,வளைவுகள் நிறைந்து
காணப்படுவதனால் சாரதிகள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்து
மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துவதன் மூலம் வாகன விபத்துக்களை தவிர்த்து
கொள்ளலாம் என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
