வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்கள்: முல்லைத்தீவு மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
முல்லைத்தீவில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழையினால் மக்கள் பாரிய அழிவுகளை எதிர்நோக்கியுள்ளனர்.
அந்தவகையில் நேற்றைய தினம்(16.12.2023) திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பண்டாரவன்னி கிராமத்தில் உள்ள 32 குடும்பங்களை சேர்ந்த 102 பேர் பாதுகாப்பாக மீட்க்கப்பட்டு கருவேலன்கண்டல் அ.த.க பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பெய்து வருகின்ற கனமழை
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து வான் பாய்கின்ற நிலைமை காணப்படுகிறது.
இந்நிலையில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் மாங்குளம், பனிக்கன்குளம், பண்டாரவன்னி, இந்துபுரம், தட்டையர்மலை, புளியங்குளம், தச்சடம்பன் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 127 குடும்பங்களை சேர்ந்த 423 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மொத்தமாக 695 குடும்பங்களை சேர்ந்த 2117 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |