சீனாவை மிரளவைத்த கனமழை: ஒரே நாளில் 15 பேர் பலி
தென்மேற்கு சீனாவின் சோங்கிங்கில் பெய்து வரும் கனமழை காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 4 பேர் மாயமாகியுள்ளதாகவும் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சோங்கிங் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் 1,30,000-க்கும் மேற்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனமழையின் காரணமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சிச்சுவானில் வெள்ளம் காரணமாக 85 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மீட்புக் குழுவினர் விரைந்து படகு உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை சம்பவ இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
பருவகால மழை
மேலும் கனமழையால் ஒரு சில பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. பருவகால மழை ஒவ்வொரு ஆண்டும் சீனாவில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தெற்கில் பாதிப்பு சற்று அதிகமாகவே காணப்படும்.
இருப்பினும், கடந்த 50 ஆண்டுகளில் இந்தாண்டு பருவமழை மிக மோசமானதாகக் கருதப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதேபோன்று, கடந்த 2021ல் ஹெனான் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதுமட்டுமன்றி 1998 இல் யாங்சே ஆறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 4,150 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
