இராணுவத்தினருக்கும் மாணவர்கள் சிலருக்கும் இடையில் குழப்பம் ஏற்பட்டதா?
மினுவாங்கொடை பகுதியில் இராணுவத்தை சேர்ந்த சிலருக்கும் பாடசாலை மாணவர்களிற்கும் இடையில் குழப்ப நிலை ஏற்பட்டதாக தென்னிலங்கை சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இவ்வாறு இடம்பெற்ற மோதலில் இராணுவத்தை சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பிலுள்ள இராணுவ தலைமையகத்தில் தற்போது பணியாற்றும் வவுனியா பாதுகாப்பு படை தலைமையகத்தை சேர்ந்த மூன்று இராணுவத்தினர் மினுவாங்கொடையில் பாடசாலை மாணவர்கள் ஏழு பேருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர் என்றும் குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த மோதலிற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரை மேற்கோள்காட்டி அந்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்போது சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வழக்கு எதிர்வரும் 24ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் நெருக்கடியில் இலங்கை! - சீனாவிடம் உதவி கேட்ட கோட்டாபய (பத்திரிக்கை கண்ணோட்டம்) |
