உக்ரைனில் சிக்கியுள்ள மாணவனின் குடும்பத்தினர் விடுத்துள்ள உருக்கமான வேண்டுகோள்
உக்ரைனில் மருத்துவம் படிக்கும் தனது மகன் உட்பட அனைத்து இந்திய மாணவர்களையும் அழைத்துவர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவரின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம் - செஞ்சி சக்கராபரம் பகுதியைச் சேர்ந்த அந்த மாணவனின் அப்பா கூலி வேலை செய்து வருகின்றார். தாய் விஜயலட்சுமி தையல் வேலை செய்து வருகின்றார்.
இவர்களுடைய மகன் முத்தமிழின் (26). தற்போது உக்ரைனில் - வெனிடாஸ் மாகாணத்தில் மருத்துவம் இறுதியாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முதல் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் மாணவர் முத்தமிழன் நாடு திரும்பத் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்ட முத்தமிழன், 'தான் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே குண்டு வெடித்து அதன் அதிர்வை உணர முடிந்தது. மேலும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே உணவு கிடைக்கும் சூழல் இருப்பதாகவும், எடிஎம்-ல் பணம் எடுக்க முடியாத சூழல் உள்ளதால் விடுதியிலேயே முடங்கியுள்ளோம்' என தந்தையிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உக்ரைனில் படிக்கும் மாணவரின் தந்தை சேகர் கூறுகையில், என் மகனுடன் தமிழகத்தைச் சேர்ந்த 150 மாணவர்கள் படித்து வரும் சூழலில் அனைவரையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.