கனேடிய உயர்ஸ்தானிகரினால் இருதய சிகிச்சை பிரிவு திறந்துவைப்பு (VIDEO)
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட இருதய சிகிச்சை பிரிவு நேற்று இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த இருதய சிகிச்சை பிரிவிற்கு மார்க்கம் - முல்லை இருதய நோய் மையம் என பெயரிடப்பட்டுள்ளதுடன், பெயர் பலகையினை இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் திறந்துவைத்துள்ளார்.
மேலும், வைத்தியசாலை மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மு.உமாசங்கர் தலைமையில் கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலில் மூத்த இருதய நோய் நிபுணர்களான வைத்தியர் பி.லக்ஷ்மன், வைத்தியர் எம்.குருபரன், நோயாளர் நலன்புரி சங்கத்தின் தலைவர் மற்றும் வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.
கனடாவில் உள்ள செந்தில் குமரான் நிவாரண நிதியத்தின் நிதித்திரட்டலில் 2 மில்லியன் ரூபா
செலவில் இந்த இருதய சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருடன் சிறகடிக்க ஆசை கோமதி பிரியாவிற்கு திருமணம்? யார் அந்த நடிகர் தெரியுமா Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam
