சம்பிக ரணவக்கவுக்கு எதிரான வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்மானம்
முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்கவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க, கடந்த 2016ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் வைத்து இளைஞர் ஒருவரை தான் செலுத்திய வாகனத்தினால் மோதிக் காயம் ஏற்படுத்தியிருந்ததுடன், அது குறித்த தகவல்களை மறைத்து போலி சாட்சிகளை உருவாக்கி தப்பித்துக் கொண்டிருந்தார்.
எனினும் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் விபத்து நடைபெற்ற சந்தர்ப்பத்தில் சம்பிக ரணவக்கவே விபத்து நடைபெற்ற நேரத்தில வாகனத்தைச் செலுத்தி இருப்பது கண்டறியப்பட்டது.
குற்றச்சாட்டுகள்
இதனையடுத்து அலட்சியமாக வாகனம் செலுத்துதல், தகவல்களை மறைத்தல் மற்றும் இளைஞன் ஒருவருக்கு காயமேற்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கொன்று பதியப்பட்டுள்ளது.
குறித்த வழக்கை எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளதாக கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



