நீரிழிவிற்கு எதிரான ஆரோக்கியமான வாழ்வு எம் அனைவரதும் இலக்கு!
மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைச் சங்கம், ரட்ணம் அறக்கட்டளை (UK), IMHO ஆகியன இணைந்து "இலவச மாபெரும் உணவுத் திருவிழா நீரிழிவிற்கு எதிரான உணவுப் போராட்டம்" எனும் தொனிப் பொருளில் பெருமையுடன் வழங்கும் நீரிழிவு விழிப்புணர்வும் ஆரோக்கிய இலவச உணவுத் திருவிழாவும்.
விசேட வைத்திய நிபுணர்கள் வழங்கும் ஆரோக்கிய வாழ்வியல் ஆலோசனைகள், சீரான உணவுப் பழக்கவழக்கங்கள், போசாக்கு நிறைந்த உணவுகள் பற்றிய விழிப்புணர்வும் தினசரி உடற் பயிற்சி, மன அழுத்தமற்ற வாழ்வு குறித்த செயல்முறையும் ஆரோக்கிய இலவச உணவுத் திருவிழாவும் 15.03.2026 அன்று ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணியளவில் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.
எனவே சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை இலவசமாக சுவைத்து மகிழும் அரிய வாய்ப்பிற்கு தாங்கள் அனைவரும் கலந்து சுக வாழ்விற்கான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்