சுகாதாரத்துறை ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைநிறுத்த போராட்டம்: நோயாளிகள் அசௌகரியம் (Video)
நாடு முழுவதும் சுகாதாரத்துறை ஊழியர்களினால் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் பணி பகிஷ்கரிப்பு இடம்பெற்று வருகிறது.
யாழ்ப்பாணம்
யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும் ஊழியர்களினால் பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெற்று வருகிறது. அவசர சிகிச்சை மற்றும் உள்நோயாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.
வெளிநோயாளர் பிரிவிற்கு மருத்துவர் சமூகமளித்துள்ள நிலையிலும் மருந்தகங்கள் மூடப்பட்டிருக்கின்றன.
இதனால் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்ற மருந்தைத் தனியார் மருந்தகங்களில் நோயாளிகள் பெற்றுக் கொள்வதை அவதானிக்க முடிகிறது.
மேலும் மருத்துவ ஆய்வுகூட பணியாளர்களும்,பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதுடன், வெளி நோயாளர் பிரிவில் தாதியர் சேவை உட்பட பல்வேறு மருத்துவ சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
அவசர சிகிச்சை நிமித்தம் மருத்துவமனைக்கு வருபவர்கள் மட்டும் உள் நோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுவதை அவதானிக்க முடிகிறது.
வவுனியா
வவுனியா வைத்தியசாலையில் நிறைவுகாண் வைத்தியசேவையினர் மற்றும் துணை மருத்துவ சேவையினருமாகிய 18 தொழிற்சங்க கூட்டமைப்பினர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக நோயாளர்கள் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இன்று முதல் 2 நாட்களுக்கு மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைளை முன்னெடுக்கவுள்ளதாகச் சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் அறிவித்திருந்தது.
சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்குவதற்கு, அரசாங்கம் இதுவரையில் நடவடிக்கை எடுக்காமை காரணமாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் வவுனியாவில் குறித்த வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் இதன் காரணமாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கிளினிக் சேவைகள், இரத்த பரிசோதனைகள், கதிரியக்க சேவைகள் மற்றும் மருந்தகம் போன்ற பல்வேறான சேவைகள் இயங்காமையினால் நோயாளர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
கடந்த மாதம் 7ஆம் திகதி முதல் 9 நாட்கள் தாதியர் உள்ளிட்ட 18 சுகாதார
தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.











ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
