திருகோணமலையில் திடீர் பரிசோதனையை மேற்கொண்ட சுகாதார ஊழியர்கள்
திருகோணமலை, மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தோப்பூர் பிரதேசத்திலுள்ள மாலை நேரக் உணவு கடைகள் நேற்று திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இதன்போது உணவுப் பாதுகாப்பிற்காக மேற்கொண்ட ஒன்றுக் கூடல்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
களப் பரிசோதனை
மேலும் களப் பரிசோதனைகள் மூலம் குறைப்பாடுகள் சுட்டிக்காட்டப்பட்டு, அதனைத் திருத்திக்கொள்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் நிவர்த்தி செய்யாத 2 சிற்றுண்டி நிலையங்களுக்கு, உணவுப் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் வகையில் உணவுகளைத் தயாரித்தமைக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மூதூர் சிரேஷ்ட பொது சுகாதாரப் பரிசோதகர் ஐ.எம்.ரினூஸ்(I.M.Rinush) தெரிவித்துள்ளார்.
குறித்தப் பிரதேசத்தின் சுகாதார வைத்திய அதிகாரி ஹில்மி முஹைதீனது (Hilmi mohideen) ஆலோசனைக்கமைய மூதூர் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |