சுகாதார தொண்டர் விவகாரம் குறித்து டக்ளஸ் வலியுறுத்தியுள்ள விடயம்
கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ள சுகாதார தொண்டர்களுக்கு அவர்களது சேவையின் அனுபவத்தை தகுதியாக கருத்தில் எடுத்து நாம் கடந்த காலத்தில் மேற்கொண்டது போன்று தற்போதும் விசேட அமைச்சரவை பத்திரம் ஒன்றினூடாக நிரந்தர நியமனங்களை பெற்றுக்கொடுப்பதே சிறந்ததாக அமையும் என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், நிரந்தர நியமனத்திற்கான நேர்முக தேர்வில் ஏற்பட்ட குழப்பங்களால் தமது நிரந்தர வருமானம் குறித்த நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளதை கருத்திற்கொண்டு அதன் வலிகளை சுமந்தவர்களாக சுகாதார தொண்டர்கள் தாற்போது வீதிக்கிறங்கி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
குறிப்பாக நீண்டகாலமாக துறைசார் சேவையில் இருப்பவர்களை புறக்கணித்து, சம்பந்தமில்லாதவர்களும் அனுபவ தகுதி இல்லாதவர்களையும் கொண்டு குறித்த வேலைவாய்பு வெற்றிடங்களை நிரப்புவதற்கான முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
ஆலோசனை
இதை அறிந்த குறித்த சுகாதார தொண்டர்கள் குறிப்பாக நீண்டகாலமாக தொடர்ச்சியாக தொண்டர்களாக சேவையாற்றி வந்தவர்களே இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியிருக்கின்றார்கள்.

குறிப்பாக நீண்டகாலமாக துறைசார் சேவையில் இருப்பவர்களை புறக்கணித்து, சம்பந்தமில்லாதவர்களும் அனுபவ தகுதி இல்லாதவர்களையும் கொண்டு குறித்த வேலைவாய்பு வெற்றிடங்களை நிரப்புவதற்கான முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இன்றைய ஆட்சியாளர்களுடன் கலந்துரையாடி அழுத்தங்களை கொடுத்து இந்த சுகாதார தொண்டர்களுக்கு நிரந்தர நியமனத்தக்கான வாய்ப்பை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பது தான் எனது ஆலோசனையாக இருக்கும் என எண்ணுகின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.
அந்த மக்களின் ஊடுருவலால் ஐரோப்பா சீரழியுது: அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் கடும் விமர்சனம் News Lankasri