எரிபொருள் கோரி வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட சுகாதார ஊழியர்கள்
திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் தள வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார மருத்துவ ஊழியர்கள் எரிபொருள் வழங்க கோரி வீதியை மறித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுமக்கள் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த வேளையில் சுகாதார மருத்துவ ஊழியர்கள் எரிபொருள் பெற்று தருமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் எரிபொருள் உரிமையாளருக்கும்,பொதுமக்களுக்கு முறுகல் நிலை ஏற்பட்டதால் ஸ்தலத்துக்கு வந்த பொலிஸாரும், இராணுவத்தினரும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து எரிபொருள் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளனர்.
இதனையடுத்து சுகாதார ஊழியர்களின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் களைந்து சென்றுள்ளனர்.
புத்தளம்
புத்தளம் வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள் தாம் கடமைக்கு வருவதற்கு எரிபொருளை வழங்குமாறு கோரி குருணாகல்-புத்தளம் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எரிபொருள் இல்லாத காரணத்தினால், தம்மால் கடமைக்கு வர முடியவில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
வாரத்தில் ஏழு நாட்களும் தாம் பணிக்கு வர வேண்டும் எனவும் ஏனைய அரச சேவைகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு எந்த எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
100 கிலோ மீற்றருக்கும் அப்பால் இருந்து பணிக்கு வர வேண்டியுள்ளது. இதனால், எரிபொருள் பிரச்சினைக்கு வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்குமாறும் அவர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri

சன் டிவி சீரியல்களை ஓரங்கட்டி டாப் 5 TRPயில் முன்னேறிய விஜய் டிவி சீரியல்... அதிரடி மாற்றம் Cineulagam
