இறக்குமதி செய்யப்படும் முட்டைகளினால் ஏற்படக்கூடிய ஆபத்து
இறக்குமதி செய்யப்படும் முட்டைகளினால் பாரிய சுகாதார கேடுகள் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முட்டை இறக்குமதி செய்வதன் மூலம் உள்நாட்டு முட்டை உற்பத்திக்கும் பாதிப்பு ஏற்படக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளின் ஊடாக பறவைக் காய்ச்சல் நோய்த் தொற்று பரவும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முட்டைகள் இந்தியாவிலிருந்து இறக்குமதி
ஏற்கனவே இரண்டு மில்லியன் முட்டைகள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு சந்தையில் நிலவி வரும் தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பு காரணமாக அரசாங்கம் முட்டை வகைகளை இறக்குமதி செய்யத் தீர்மானித்திருந்தது.
எவ்வாறெனினும், இறக்குமதி செய்யப்படும் முட்டை வகைகள் பொதுமக்களின் நேரடி நுகர்விற்காக விற்பனை செய்யப்படாது எனவும், அவை பொதுவாக உணவு உற்பத்தி தேவைகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 17 மணி நேரம் முன்

பிரம்மபுத்திரா நதி இந்தியாவிற்குள் பாய்வதை சீனா நிறுத்த வேண்டும்! பாகிஸ்தான் விடுத்த கோரிக்கை News Lankasri
