இரவு நேர ஊரடங்கு உத்தரவின் தாக்கத்தை எதிர்பார்க்கும் சுகாதார அதிகாரிகள்
இலங்கைக்குள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள இரவு ஊரடங்கு உத்தரவின் தாக்கத்தை சுகாதார அதிகாரிகள் எதிர்பார்ப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரவில் ஊரடங்கு உத்தரவை விதிப்பது சாதகமான நடவடிக்கையாக பார்க்கப்பட வேண்டும் என்று சுகாதார ஊக்குவிப்பு பணியகத்தின் இயக்குனர் வைத்தியர் ரஞ்சித் படுவந்துடுவ தெரிவித்துள்ளார்.
இரவு ஊரடங்கு உத்தரவை பொறுத்தவரை, பொதுமக்கள் மாலையில் தாமதமாகாமல் வீடு திரும்புவதை உறுதி செய்யும் என்று படுவந்துடுவ குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்வுகள், சமூகக் கூட்டங்கள் போன்றவை இரவில் பெரும்பாலும் நடைபெறுகின்றன, இரவு நேர ஊரடங்கினால் அவை தடுக்கப்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இன்று முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
