2 பில்லியன் ரூபா நிதியை கோரும் சுகாதார அமைச்சு: வெளியான காரணம்
இலங்கை சுகாதார அமைச்சு அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு சுமார் 2 பில்லியன் ரூபாயை நிதியமைச்சிடம் கோர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிதியினால் சுமார் 200 வகையான அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா தெரிவிக்கையில்,
தற்போதுள்ள டெண்டர் நடைமுறைகளின் கீழ் இந்த மருந்துகளை வாங்குவதற்கு குறைந்தது நான்கரை மாதங்கள் ஆகும்.
அவசரகால கொள்முதல்
இருப்பினும் தற்போதுள்ள அவசர நிலமையை கருத்தில் கொண்டு இது சாத்தியமில்லை. அவசரகால கொள்முதலின் கீழ் கொள்வனவு செய்தால் ஒன்றரை மாதங்களில் மருந்துகள் கிடைக்கும்.
மேலும் எந்தெந்த மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் குறைவாக உள்ளன என்பதைக் கணக்கிடுவது அதிகாரிகளுக்குக் கடினமாக உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |