நாட்டை முழுமையாக முடக்கவில்லை என்றால் பாரிய ஆபத்து - சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கை
தற்போதுள்ள நிலையில் நாட்டை மூடுமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டு மக்களுக்கு பயண கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை என்றால் கோவிட் தொற்றினால் ஏற்படும் கடுமையான பாதிப்புகளுக்கு நாடு முகம் கொடுக்க நேரிடும் ஆபத்துக்கள் உள்ளதாக சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவிட் வைரஸின் புதிய மாறுபாட்டினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனால் நாடு கடுமையான ஆபத்தான நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் அதிகமான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.
தற்போதைய நிலைமையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எங்களால் எதிர்பார்க்க முடியாதளவு நாட்டை மூடி விட நேரிடும். வெளியிடப்படும் கோவிட் தொற்றாளர்களின் தரவுகளில் உண்மையான தகவல் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதில் சந்தேகம் உள்ளது. PCR முடிவுகள் தாமதமாகவே கிடைக்கின்றது.
உரிய நேரத்தில் PCR முடிவுகள் கிடைத்தால் அடையாளம் காணப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
