தரமற்ற உணவுகள்! பாடசாலை மற்றும் மருத்துவமனைகளில் சோதனை
பாடசாலைகள் மற்றும் மருத்துவமனை சிற்றுண்டிச்சாலைகளில் ( canteens) வழங்கப்படும் உணவின் தரமற்ற நிலை குறித்த பொதுமக்களின் எதிர்ப்பு மற்றும் முறைப்பாடுகளை அடுத்து, பொது சுகாதார ஆய்வாளர்கள், நாடு முழுவதும் தீவிர சோதனைகளை ஆரம்பித்துள்ளதாக பொது சுகாதார ஒன்றியத்தின்(PHI) தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
பல முறைப்பாடுகள்
குறித்த சிற்றுண்டிச்சாலைகளில் வழங்கப்படும் உணவின் தரம் பற்றி பல முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொள்கை வழிகாட்டுதல்களின் கீழ், அதிக சர்க்கரை, அதிக உப்பு மற்றும் அதிக கொழுப்புள்ள உணவுகளை கட்டுப்படுத்தவும், அத்துடன் நொறுக்குத் தீனிகளை அகற்றவும் பாடசாலை சிற்றுண்டியகங்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சின் அறிவிப்பு
இந்த விதிமுறைகள் இருந்தபோதிலும், அவை புறக்கணிப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று உபுல் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை பாடசாலை மற்றும் மருத்துவமனைகளின் சிற்றுண்டியகங்களில் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால், அது தொடர்பில் 0112112718 என்ற எண்ணுக்கு முறைப்பாடுகளை தெரிவிக்குமாறு, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri
