ஓராண்டு காலத்திற்கு சுகாதார கெடுபிடிகள் அமுல்படுத்த நேரிடும்
எதிர்வரும் ஓராண்டு காலத்திற்கு சுகாதார கெடுபிடிகளை அமுல்படுத்த நேரிடும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்பொழுது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் ஒக்ரோபர் மாதம் 1ம் திகதி நீக்கப்பட்டாலும், சுகாதார கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்ற வேண்டுமென தெரிவித்துள்ளது.
நாட்டில் கோவிட் பரிசோதனை எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்படுவதாகவும் இதனால் நோய்த் தொற்று உறுதியாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையின் வீழ்ச்சியைக் கொண்டு நாம் திருப்தி அடைந்துவிட முடியாது என தெரிவித்துள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் துணை செயலாளர் டொக்டர் நவீன் டி சொய்சா இதனை தெரிவித்துள்ளார்.
பயணங்களை மேற்கொள்ளல், நிகழ்ச்சிகளை நடாத்துதல், விருந்துபசாரங்களை நடாத்துதல், மத வழிபாடுகளில் ஈடுபடுதல், வர்த்தக நடவடிக்கைகிளல் ஈடுபடுதல் போன்ற அனைத்திலும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam