யாழில் இடம்பெயர்ந்த மக்களுக்கு சுகாதார வசதிகள் - சுகாதார பணிப்பாளர்
கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக இடம் பெயர்ந்து யாழ்.காக்கைதீவு கடற்றொழிலாளர் மண்டபத்தில் தங்கியுள்ள மக்களை நேரில் சென்று பார்வையிட்ட வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் திலிப் லியனகே பாதிக்கப்பட்டவர்களுக்கான சுகாதார வசதிகளை ஏற்பாடு செய்து கொடுப்பதற்கு நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்.
இடம்பெயர்ந்த மக்கள்
யாழ். சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 12 குடும்பங்களைச் சேர்ந்த 37 பேர் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து காக்கைதீவு மீனவ சமூக மண்டபத்தில் நேற்று முன்தினம் (01.11.2022) தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நேற்று (02.11.2022) நேரடியாக சென்று பார்வையிட்டதோடு உரிய சுகாதார வசதிகளை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 20 மணி நேரம் முன்

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
