யாழில் சுகாதார நடை முறைகளை பின்பற்றாத விற்பனை நிலையங்கள் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
யாழ். சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர்கள் கடந்த சில நாட்களாக உணவகங்கள் மற்றும் பலசரக்கு விற்பனை நிலையங்களில் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று( 24.04.2024 ) சுழிபுரம் பிரிவு பொது சுகாதார பரிசோதகர் தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் பரிசோதனை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
வழக்குகள் தாக்கல்
இதன்போது காலாவதியான உணவு பொருட்கள், பழுதடைந்த உணவு பொருட்கள், உரிய சுகாதார நடை முறைகளை பின்பற்றாத பலசரக்கு விற்பனை நிலையம் இனங்காணப்பட்டுள்ளது.
மேற்படி பலசரக்கு கடை உரிமையாளருக்கு எதிராக சுழிபுரம் பொது சுகாதார பரிசோதகரினால் இன்று (25.04.2024) மல்லாகம் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில் இன்றைய தினமே வழக்குகளை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிமன்றம்,பலசரக்கு கடை உரிமையாளருக்கு 40,000 ரூபா தண்டம் விதித்ததுடன் கடுமையான எச்சரிக்கையும் விடுத்தது.அத்துடன் கைப்பற்றப்பட்ட பொருட்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் அழிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |