நிவாரணப் பணிகளில் ஈடுபடுவோருக்கு சுகாதார தரப்பின் எச்சரிக்கை
வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளில் நிவாரண நடடிக்கைகளில் ஈடுபடுவோர் எலிக்காய்ச்சல் நோயிலிருந்து பாதுகாப்பு பெற்றுக் கொள்ளுமாறு வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண நிலைமையில் சுகாதார நடவடிக்கை தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் போதே இதனை தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நிவாரணப் பணி
நிவாரணப் பொருட்களை கொண்டு செல்வோர் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டிருப்போர் எலிக்காய்ச்சலுக்கான மாத்திரைகளை எடுத்துக் கொள்வது சிறந்ததாகும். நிவாரணப் பொருட்களை விநியோகிப்போர் அனாவசியமாக நீரில் இறங்குவதை தவிர்த்துக் கொள்வது நன்மை பயக்கக் கூடியது.
12 வயதுக்கு குறைந்தவர்கள் கட்டாயம் எலிக்காய்ச்சலுக்கான மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
எலிக்காய்ச்சலுக்கான அறிகுறிகளாக தொடரான காய்ச்சல், தலைவலி, கண்கள் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறமாதல், சிறுநீரின் கடும் நிறம், வயிற்று வலி போன்றன இருந்தால் உடன் வைத்தியரை நாடவும்.
வெள்ளம் வடிந்தோடிய பின்னர் நுளம்பு பெருக்கமும் அதிகரிக்கக் கூடும். அதையும் கட்டுப்படுத்திக் கொள்வதில் நாட்டம் காட்ட வேண்டும்.
சிறுவர்களை வெள்ளப் பெருக்கெடுத்த பகுதிகளுக்கு அழைத்துச் செல்வதை தவிர்த்துக் கொள்ளவும். ஏனென்றால் 12 வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்கு எலிக்காய்ச்சலுக்கான மாத்திரைகளை வழங்க முடியாது.
அதனால் சிறுவர்களை பாதுகாப்பது பொற்றோர்களின் கடமையாகும் என குறிப்பிட்டுள்ளார்.
மரண வீட்டில் அரசியல்.. 1 மணி நேரம் முன்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அறிவுக்கரசிக்கு நடந்த தரமான சம்பவங்கள்... வைரலாகும் போட்டோ Cineulagam
சிறுபிள்ளைகளையும் விட்டுவைக்காத பிரித்தானிய அரசு: அறிமுகமாகும் புதிய புலம்பெயர்தல் விதி News Lankasri