பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டக் களத்தில் விக்னேஸ்வரன்
பல்கலைக்கழக மாணவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட போராட்டம் மேலும் வலுப்பெற அனைவரும் ஒத்துழைப்பு வழங்க முன்வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.
நல்லூரில் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் உணவு தவிர்ப்பு போராட்டத்தின் 8ஆவது நாளான இன்று, போராட்டக்களத்திற்கு சென்று பார்வையிட்டபின்னர் கருத்து வெளியிடும்போதே இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டும் என்பதனை தான் வலியுறுத்துவதாகவும் அதற்கான அழுத்தத்தினை மக்கள் ஒழுங்கு செய்யும் சிறு சிறு போராட்டங்கள் ஊடாக அழுத்தத்தினை பிரயோகிக்க முடியும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் போராட்டம் மேலும் மேலும் வலுப்பெற்று சர்வதேச விசாரணையை சர்வதேச அரங்கில் வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.






சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
