யாழில் ஹயஸ் ரக வாகனம் மோதி இளைஞன் ஒருவர் படுகாயம்
யாழ்ப்பாணம் (Jaffna) - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பாலத்திற்கு அண்மித்த பகுதியில் ஹயஸ் ரக வாகனம் மோதியதில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவமானது, நேற்றிரவு (08.09.2024) இடம்பெற்றுள்ளது.
அராலி கிழக்கு, வட்டுக்கோட்டையை சேர்ந்த 29 வயதுடைய லோகேநாதிரம் கஜேந்திரன் என்ற இளைஞரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதி
ஓட்டுமடம் பக்கத்தில் இருந்து வட்டுக்கோட்டை பக்கமாக வந்த ஹயஸ் ரக வாகனம் ஒன்று வீதியை கடக்க முற்பட்ட இளைஞன் மீது மோதியுள்ளது.
இதன்போது, குறித்த இளைஞனின் தலையில் அடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
அதேவேளை, விபத்து சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam
