மாசடைந்து காணப்படும் ஹட்டன் நகரம் : பொதுமக்கள் விசனம்
நுவரெலியாவின் நுழைவாயிலான ஹட்டன் நகரம் தற்போது குப்பை நகரமாக மாறிவருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
உலகின் புகழ்பெற்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகளின் சுற்றுலா இடமாக கருதப்படும் சிவனொளிபாதமலை, சென்கிளையார், டெவோன், நுவரெலியா, எல்ல, உள்ளிட்ட பிரதான சுற்றுலா பிரதேசங்களுக்கு செல்லும் அதிகமான மக்கள் ஹட்டன் ஊடாகவே வருகை தருகின்றனர்.
இந்நிலையில் ஹட்டன் நகரில் பெரும்பாலான இடங்கள் குப்பை கூலங்களாக காணப்படுவதனால் சுற்றுலா பிரயாணிகளும்,பொதுமக்களும் மிகவும் அறுவறுப்பாக செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் இங்கு வாழும் மக்கள் பற்றியும் பிரதேசம் பற்றியும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பிரதேசம் பற்றிய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவது தவர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாக பலரும் குற்றம் சுமத்துகின்றனர்.