ஹட்டன் ஸ்ரீ மாவடி அம்மன் ஆலய பாற்குட பவனி
ஹட்டன் பிரதேச ஆலயங்களில் ஒன்றான ஹட்டன் பண்டாரநாயக்க டவுன் அருள்மிகு ஸ்ரீ மாவடியம்மன் ஆலயத்தில் 46ஆவது வருட மாசிமக திருவிழாவினை முன்னிட்டு பால்குட பவனி மேள தாள இசைமுழங்க மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வானது, இன்று (24.02.2024) இடம்பெற்றுள்ளது.
இதனை முன்னிட்டு, மஹா கணபதி வழிபாடு, புண்ணிய வாஜனம், கும்ப பூஜை, அக்னி காரியம், விசேட திரவிய ஓமம், திரவிய அபிசேகம், அஸ்டோத்திர சத 109 சங்காபிஷேகம் மற்றும் பாலாபிசேகம் ஆகியன நடைபெற்றுள்ளன.
கலைக்கலாசார நிகழ்வுகள்
இந்த பாற்குட பவனி ஹட்டன் ஸ்ரீ ஆஞ்சநேய ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து ஆரம்பமாகியுள்ளது.
மேலும், ஆலய பிரதம குரு சிவஸ்ரீ குமரதாசன் பாலகுமார சர்மா தலைமையில் இடம்பெற்ற கலைக்கலாசார நிகழ்வில் கிரியாகால பிரதமகுருவாக சிவஸ்ரீ ஸ்கந்தராஜா குருக்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





எங்கள் நாட்டில் உன்னை பணக்காரர் ஆக விடமாட்டேன்: புலம்பெயர்ந்தோர் ஒருவர் ஜேர்மனியில் சந்தித்த அதிர்ச்சி News Lankasri
