காணி பிரச்சினை காரணமாக ஒருவர் கொடூரமாக அடித்து கொலை
கண்டி - கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நில்லம்பை யோகலெட்சுமி தோட்டத்தில் ஒருவர் அடித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
யோகலெட்சுமி தோட்டத்தைச் சேர்ந்த 32 வயதான கிட்ணசாமி கருணாநிதி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தாக்குதலை நடத்திய நடத்திய நபர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிறைச்சாலையில் இருந்து வந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
இதன்போது சகோதரர்களுக்கிடையில் காணி பிரச்சினை காரணமாக வாய்த்தர்க்கம் ஏற்பட்டதையடுத்து அண்ணன் கத்தி மற்றும் போத்தலால் தம்பியின் தலைப்பகுதியில் தாக்கிய நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தின் பின்னர் சந்தேகநபர் தப்பிச்செல்ல முற்பட்டபோது நில்லம்பை பேருந்து நிலையத்தில் வைத்து சந்தேகநபரை ஊர் மக்கள் மடக்கிபிடித்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் கலஹா பொலிஸார் மற்றும் கம்பளை தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன்,சடலம், பிரேத பரிசோதனைக்காக பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
